News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். பால்போன்ற வெள்ளை நிறம் கொண்ட நடிகை பட்டியலில் ஹன்சிகாவுக்கென்று தனி இடம் உண்டு.

 

அந்த வகையில் ஹன்சிகா, நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்த ‘பாட்னர்’ படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெற்றது. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

 

இந்நிலையில் ஹன்சிகா தான் ஆசையாக வளர்த்து வந்த ‘புரூஸோ’ என்ற நாய்க்குட்டி உயிரிழந்துவிட்டதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புரூஸோ இது கடினமான குட்பாய். நீ என்னுடைய சிறந்த மகன், சகோதரன், உன்னை இழந்த வலியை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியாது. நீ அமைதியாக ஓய்வெடு. நீ எங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியும்’’ என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link