Share via:
பெண் போலீஸார் மீது அவதூறு குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு
சங்கர் மீது அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில்
வெவ்வேறு ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறார். அவர் மீது
குண்டர் தடுப்புச் சட்டமும் பதிவு செய்யப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில்
வதந்தி பரப்பியதான குற்றச்சாட்டில் தான் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்
பதிவு செயப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும்
அளவுக்கு தீவிரமானவையாகத் தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில்
அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று கடந்த 9ம் தேதி நீதிமன்றம்
உத்தரவிட்டது.
அனைத்து வழக்குகளிலும் சவுக்கு சங்கர் விரைவில் ஜாமீன் பெற்று
விடுதலையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது மீண்டும் ஒரு குண்டர்
தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த
மே 4ஆம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத்
தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும்
கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில்
நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின்
பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கர் மீது போடப்படுவது அப்பட்டமான பழி வாங்கும் வழக்கு
என்பதை நீதிமன்றம் அம்பலப்படுத்திய பிறகும், ஹெ.ச்.ராஜ் பாணியில், ‘கோர்ட்டாவது… …யிராவது’
என்று தி.மு.க. அரசு அப்பட்டமாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’ஆங்கிலேயர் கால தடுப்பு காவல் சட்டத்தை
தற்பொழுது, பயன்படுத்தினால் மீண்டும் ஆங்கிலேயர் சர்வாதிகார ஆட்சி போல் கொண்டு செல்லும்
என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் தமிழக
காவல்துறை பழிவாங்குவதற்காக அடைத்தது தவறு என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும்
அறிவுரை சொல்லி, குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு கொடுத்து, பிற வழக்குகளிலும்
சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கொடுக்கலாம் என்று அறிவுறுத்திய போதும், வேண்டுமென்றே நீதிபதிகளின்
பேச்சை கூட மதிக்காமல் மீண்டும் குண்டர் சட்டத்தில் பழி வாங்க தமிழக அரசு வழக்குபதிவு
செய்தது முற்றிலும் திமுக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையை அதன் பாசிச சர்வதிகார போக்கை
காட்டுகிறது. திமுக ஆட்சி தனது அதிகார ஆணவத்தின் உச்சியில் தலைகால் புரியாமல் பழிவாங்கும்
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.2026ல் மக்கள் அதற்கான தக்க பாடத்தை புகுத்துவார்கள்’’
என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.