Share via:
எப்படியாவது அண்ணாமலைக்கு சீட் கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த பாஜக இளம் தலைமுறையினருக்கு இன்று வெளியாகியிருக்கும் வேட்பாளர் பட்டியல் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.
அண்ணாமலை கேட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அண்ணாமலைக்கு மட்டுமின்றி அவருக்கு வேண்டப்பட்ட அஸ்வத்தாமன், ஏ பி முருகானந்தம், அமர் பிரசாத் ரெட்டி, வினோஜ், எஸ் ஜி சூர்யா போன்ற பலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை.
தமிழிசை செளந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியை தக்க வைத்துள்ளார். அதேநேரம் கடந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட விஜயதரணிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
பேராசிரியர் சீனிவாசன் மதுரைதெற்கு, அவினாசியில் எல்.முருகன்,. ஊட்டி போஜராஜன், வாசுதேவநல்லூர் ஆனந்தன் அய்யாசாமி, மொடக்குறிச்சி கிருத்திகா உள்ளிட்டோர் தேர்தலில் நிற்கிறார்கள்.
இந்த பட்டியலில் ஐந்து மகளிருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1. மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் 2. மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவகுமார் 3. விலவாங்கோடு – விஜய தரணி 4. அறந்தாங்கி- கவிதா ஸ்ரீநாத் 5. கோயமுத்தூர் வடக்கு – வானதி சீனிவாசன். இதனால் பெண்களுக்கு அதிக மதிப்பு மரியாதை என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்.
அண்ணாமலைக்கு அரோகரா போட்டுட்டாங்களேப்பா…
