Share via:
சினிமாவில் நடித்து அதன் பிறகு அரசியலுக்கு வரும் நடிகர்கள் மத்தியில்,
அரசியலில் இருந்து நடிப்புக்குப் போகிறார் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா. சினிமாவில்
ரஜினியை ஓரங்கட்டிவிட்டு சூப்பர் ஸ்டாராக மாறுவாரா என்று பாஜகவினர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இன்று ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், ‘’கிடுகு திரைப்பட
இயக்குனர் சகோதரர் வீரமுருகன் இயக்கத்தில்
நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை
நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில்
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,
தெலங்கானா முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை மற்றும் பலரும் கலந்துகொண்டனர்’’ என்று
தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் எப்படியாவது மத மோதலை உருவாக்கி பாஜகவுக்கு
பலம் உண்டாக்க நினைத்தார் ஹெச்.ராஜா. அவரது பாச்சா பலிக்கவில்லை. எனவே, அவர் இப்போது
நேரடியாக நடிப்பில் களம் இறங்கியிருக்கிறார்.
தேர்தலில் டெபாசிட் வாங்காதவர் சினிமாவிலாவது டெபாசிட் வாங்குவாரா
என்று கிண்டல் செய்கிறார்கள்.