Share via:
சமீபத்தில் தமிழக
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துத் திரும்பிய ஹெச்.ராஜா, தமிழக பா.ஜ.க.வின் நிரந்தரத்
தலைவராகத் தொடர்வதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அறிந்து, அண்ணாமலை ஆதரவாளர்கள்
கடும் எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.
பா.ஜ.க. மேலிடத்தின்
மூலம் ஹெச்.ராஜா நியமனம் செய்யப்பட்டார் என்றாலும், அண்ணாமலை கை காட்டியதாலே இந்த பதவி
கிடைத்தது. இது அண்ணாமலை போட்ட பிச்சை என்றெல்லாம் அண்ணாமலையின் ஐ.டி. விங் ஆட்கள்
செய்தி பரப்பிவருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுப்பது போன்று அடுத்தடுத்து
ஹெச்.ராஜா நடத்திவரும் சந்திப்பு மற்றும் மீட்டிங்கில் அண்ணாமலை பெயர் சொல்வதையே தவிர்த்து
வருகிறார்.
கமலாலயத்தில் சிறுபான்மை
அணி சார்பில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய
ஹெச்.ராஜா நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அந்த நேரத்தில் அண்ணாமலை பெயரை ஒரு இடத்தில்
கூட பயன்படுத்தவில்லை.
அதேநேரம், இதுவரை
கமலாலயத்தில் அண்ணாமலை பயன்படுத்திய அறையை தனக்கு ஒதுக்கும்படி ஹெச்.ராஜா கோரிக்கை
வைத்திருக்கிறார். இந்த அறையை யாருக்கும் ஒதுக்க வேண்டாம், எனக்கு மதிப்பும் மரியாதையும்
குறைந்துவிடும் என்று அண்ணாமலை கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறாராம்.
இதையடுத்து அந்த
அறையைக் கைப்பற்றும் முயற்சியை ஹெச்.ராஜா வலியுறுத்தவில்லை என்றாலும், அந்த அறையில்
என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஆடியோ,
வீடியோ, ரிக்கார்டிங் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள நினைக்கிறார்.
விரைவில் மிகப்பெரும்
மீட்டிங் நடத்தி அ.தி.மு.க. தலைவர்களை பாராட்டிப் பேசும் முடிவில் இருக்கிறாராம். அ.தி.மு.க.வுடன்
கூட்டணி உறுதியாகி விட்டால், அண்ணாமலை மீண்டும் தமிழகம் திரும்ப மாட்டார். நிரந்தரத்
தலைவராக மாறிவிடலாம் என்பது தான் ஹெச்.ராஜாவின் திட்டமாம்.
இன்னும் என்னவெல்லாம்
கூத்து நடக்கப்போகுதோ..?