News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us

காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி நாடு தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு துருக்கியின் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன. மேலும் பல வளைகுடா நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்குமா, இது முழு போராக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியூயார்க் டைம்ஸிற்கு கொடுத்த பேட்டியில், ‘’ஏற்கனவே இந்தியாவின் 5 விமானங்களை வீழ்த்தி விட்டோம். 2 ட்ரோன்களை வீழ்த்தி விட்டோம். இத்துடன் மோதலை நிறுத்தி கொள்ள தயார்’’ என்று தெரிவித்திருக்கிறார் என்றாலும் மோதலை தொடரவே விரும்புகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் துருக்கி போன்ற சில நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்கின்றன.

இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்கள் எல்லாமே துருக்கியில் தயாரிக்கப்பட்ட Asisguard Songar வகை மாதிரிகள் என்று தெரிவிக்கின்றன. மேலும், துருக்கியின் Ada வகுப்பு நீர்மூழ்கிக் போர் கப்பல் மே 2 அன்று கராச்சி துறைமுகத்தில் நின்றது. துருக்கியின் சி-130 ஹெர்குலஸ் ராணுவ போக்குவரத்து விமானம், ஆயுதங்களை ஏற்றி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துருக்கிய கடற்படை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் 2வது பெரிய கடற்படையான பாகிஸ்தான் கடற்படையுடன் பல கூட்டுப் பயிற்சிகளை நடத்தியுள்ளது

அதேநேரம் ஹெர்குலஸ் விமானம் ஆயுதங்களை ஏற்றி வரவில்லை என்றும் துருக்கி கூறி உள்ளது. அதேநேரம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அடுத்து என்ன முடிவு எடுக்கும் என்பது புதிராக இருக்கிறது. இதுவரை பாகிஸ்தானை இந்த நாடுகள் கண்டிக்கவில்லை. முழுமையான ஒரு போரை சந்திக்கும் சக்தி பாகிஸ்தானுக்கு இல்லை என்பது உண்மை. அதேநேரம், இஸ்லாமியக் கூட்டாளி நாடுகள் கை கொடுக்கும் பட்சத்தில் போரை தொடர்ந்து நடத்தவே பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்று தெரிகிறது.

எதிர் தாக்குதலுக்கு இந்தியா தயாராக காத்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link