Share via:
இந்தியாவில் நடுத்தர மற்றும் குறு தொழில்களை அழித்தொழித்த பெருமை
ஜிஎஸ்டிக்கு உண்டு. இப்போது ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்கும் அமைச்சர்கள் குழு ஒன்றிய
அரசின் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது.
தற்போதைய 12% மற்றும் 28% விகிதங்களை நீக்கி, இரண்டு விகிதங்களாக
மாற்றியமைக்க ஒன்றிய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. புதிய அமைப்பு: அத்தியாவசிய
பொருட்களுக்கு 5%, சாதாரண பொருட்களுக்கு 18%, மற்றும் சொகுசு பொருட்கள் / தீமை பொருட்களுக்கு
40% விகிதம்.
12% விகிதத்தில் உள்ள 99% பொருட்கள் 5%க்கு மாற்றப்படும். 28%
விகிதத்தில் உள்ள 90% பொருட்கள் 18%க்கு மாற்றப்படும். சுகாதாரம் மற்றும் உயிர் காப்பீடு
மீதான ஜிஎஸ்டி விலக்கு பெறலாம் என்ற திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்
பட்டது. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் நன்மையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமா, அல்லது
சிலபல காரணங்களை சொல்லி பிரீமியம் தொகையை உயர்த்துமா என்பது தெரியவில்லை.
இரண்டாவதாக, கார்கள் அத்தியாவசிய பொருட்களின் கீழ் வருகின்றனவா
அல்லது ஆடம்பா பொருட்களின் கீழ் வருகின்றனவா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது,
வாகனங்களுக்கு, 28% ஜிஎஸ்டி விதிக்கப் படுகின்றது. இதற்கு கூடுதலாக செஸ் வரி விதிக்கப்பட்டு,
மொத்தமாக 50% வரி, நீங்கள் செலுத்த வேண்டியுள்ளது. தற்போதைய மாற்றத்தில், கார்களுக்கான
வரி 12% க்கு குறையுமா, அல்லது 40% க்கு அதிகரிக்குமா என்பது தெரியவில்லை.
யுபிஐ மூலம் செலுத்தப்படும் பணத்துக்கும் ஜிஎஸ்டி வரு உண்டு என்று
கூறப்படுவதை அடுத்து க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர்களை பல வியாபாரிகள் கிழித்துவருகிறார்கள்.
ரோட்டோரக் கடையில் விற்பனை செய்யப்படும் தோசை மாவுக்கும் வரி உண்டு என்று கூறப்படுவது
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.