Share via:

அப்பா என்று ஸ்டாலினை மாணவர்கள் அன்புடன் அழைக்கிறார்கள் என்றால்
தி.மு.க. உடன்பிறப்புகளால் மாப்பிள்ளை சார் என்று அன்புடனும் அச்சத்துடனும் அழைக்கப்படுபவர்
மாப்பிள்ளை சபரீசன். அவர் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வை ஆட்டுவிக்கும் சக்தியாகத் திகழ்வதுடன்
பா.ஜ.க.வுக்கு பி டீம் ஆக செயல்படுவதாகவும்
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் மாப்பிள்ளை சபரீசன் பந்தாவாக நிற்பதும்,
அவரைச் சுற்றிலும் அடிமை போன்று தி.மு.க. எம்.பி.க்கள் நிற்கும் புகைப்படம் வெளியாகி
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாப்பிள்ளை விசிட் குறித்து தி.மு.க.வினர்
அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.
எனவே அ.தி.மு.க.வினர் இதனை பா.ஜ.க. மறைமுகக் கூட்டணி என்று குற்றம்
சாட்டுகிறார்கள். இந்த விசிட் குறித்து எதிர்க்கட்சியினர், ‘’யாரை திருப்திப்படுத்த
மாப்பிள்ளை டெல்லியிலேயே குடியேறினார்? இன்று வரை அவர் என்ன வேலை செய்கிறார் என்பது
யாருக்கும் தெரியாது, அது திமுக அம்பலப்படுத்தப்படவில்லை.. ரகசியமாக வைத்திருக்கிறார்கள்..
ஆனால் அவர் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும்
ஒவ்வொரு மோசடியிலும் அவர் பெயர் அடிபடுகிறது.
மாப்பிள்ளை ரகசியமாக அதானியை சந்திக்கிறார், ரகசியமாக அமித் ஷாவை
சந்திக்கிறார் என்று டெல்லியிலிருந்து எல்லோரும் சொல்கிறார்கள், தமிழ்நாடு பாஜக மேனேஜர்
உங்களுடன் அழைத்துச் செல்லவில்லையா? எதுவும் ரகசியமாக இருக்க வேண்டியதில்லை. டெல்லி,
வெளிநாடு மற்றும் தமிழ்நாட்டில் உங்கள் தொழிலை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். தன்னை
மட்டும் காப்பாற்ற எந்த எல்லையையும் தாண்டுவார், அவர் சொந்த பிரச்சனைகளுக்கு மட்டும்தான்
செல்வார். ஆனால் திமுக, தமிழ் நாடு மக்கள் பிரச்சனைகளுக்கு களத்திற்கு வராது.
மாப்பிள்ளை எங்கெல்லாம் தொழில் செய்கிறாரோ, அல்லது தொடர்பு இருக்கிறதோ
அங்கெல்லாம் பாஜக கோமாளி மேனேஜர் உதவி செய்கிறார். அதே உதவி பாஜக கோமாளி மேனேஜர் அவர்களின்
உறவினர்களுக்கு உதவுவார். ஏன் ரகசிய கூட்டணி? வெளிப்படையாக பாஜகவின் காலில் விழுந்து,
அஜித் பவார் போல பாஜக உங்களுக்கு வெளிப்படையாக உதவட்டும்…’’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கும் சபரீசனுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லுங்கப்பா.