Share via:

அண்ணா பல்கலைக்கழக
மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த விவகாரத்தை திசை திருப்பது போன்று
பச்சை வேட்டை சாட்டையால் அடி, காவடி எடுக்கப்போகிறேன், செருப்பு போட மாட்டேன் என்றெல்லாம்
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் ஆய்வாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
அண்ணாமலை சாட்டை
அடித்து கொள்வதும், ஒருமண்டலம் செருப்பில்லாமல் நடப்பதும் அவரது மனைவி அகிலாவும் அவரது
அப்பாவும் நடத்திய யாகத்தில் பிராமண புரோகிதர்கள் சொன்னது பரிகாரம். அப்படி செய்தால்
மட்டுமே அண்ணாமலை ஃபைல்ஸ், மச்சானுடைய ஐ.டி. பஞ்சாயத்துகளில் இருந்து தப்பிக்க முடியும்
என்று ஐடியா கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் ஜோதிடர் குறித்துக் கொடுத்தபடி நடுரோட்டில்
பச்சை நிற வேட்டியுடன் சாட்டையால் அடித்துக்கொண்டு தோஷம் கழித்திருக்கிறார் என்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக
மாணவியின் எஃப்.ஐ.ஆர். எப்படி வெளியே வந்தது என்பது குறித்தும் இந்த விவகாரத்தில் சிக்கிய
ஞானசேகர் தி.மு.க.வின் உறுப்பினர் என்பதற்கான ஆதாரத்தையும் அண்ணாமலை வெளியிட்டார்.
இந்த நிலையில், அந்த ஞானசேகர் என்பவர் வேறு ஒரு நபர் என்று அந்த நபரைக் காட்டி பேச
வைத்திருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த குற்றவாளியுடன் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும்
இல்லை என்று தெளிவு படுத்தியிருக்கிறது.
அதேபோல் எஃப்.ஐ.ஆர்.
வெளியான விவகாரத்தில் அண்ணாமலைக்குப் பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த
விஷயங்களையும் சமீபத்தில் ரெய்டு விவகாரத்தையும் திசை திருப்புவதற்காகவே கோமாளித்தனமாக
செருப்பு போட மாட்டேன், சாட்டையால் அடித்துக் கொள்வேன் என்றெல்லாம் பேசியதுடன் நில்லாமல்
விவகாரத்தை திசை திருப்பியிருக்கிறார் என்கிறார்கள்.
செருப்பு போடாமல்
நடந்தவர்களை செருப்பு போட வைத்தது திராவிடம், சாட்டையால் அடித்துக்கொள்ளக் கூடாது என்று
அந்த மக்களைத் தடுத்து நிறுத்தியது திராவிடம். இப்போது மீண்டும் கற்காலத்துக்கு மக்களை
அண்ணாமலை அழைத்துச்செல்கிறார் என்று தி.முக.வினர் போட்டு வெளுக்கிறார்கள்.
அண்ணாமலை சாட்டையால்
அடித்துக்கொள்ள முயன்ற நேரத்தில் பா.ஜ.க.வினர் பாய்ந்து தடுத்ததும், அதை மீறி அவர்
அடித்துக்கொண்டதும், செம நாடகம் என்கிறார்கள் உடன்பிறப்புகள். அந்த சாட்டை சாதாரண நூலினால்
ஆனது, நிஜ சாட்டை நாங்கள் தருகிறோம், நாங்களே அடித்தும் விடுகிறோம் என்கிறார்கள். அட,
போங்கப்பா.