News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

தமிழகத்துக்கு சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு தமிழக மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை முதலில் போட்டு உடைத்தவர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்த சி.வி.ஆனந்த போஸ்க்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற ஆளுநர் ஆனந்தபோஸ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதையடுத்து மம்தா பானர்ஜி, ‘‘ஆளுநர் ஆனந்தபோஸின் ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. மேற்கு வங்க ஆளுநராக, தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இப்போதுதான் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் அரசியல மைப்பின் மாண்பை சீர்குலைப்பதோடு, கூட்டாட்சி தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்ப்பதாக உள்ளன. மாநிலங்களின் கவுரவத்தை சீர்குலைக்கும் தன்னிச்சையான முடிவுகளில் இருந்து மத்திய அரசு விலகியிருக்க வேண்டும்’’ என்று கொதித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கர், தமிழக மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு நில ஊழலில் ஆர்.என்.ரவி சிக்கியிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.  விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்தில் நிலம் பரிவர்த்தனை என்ற பெயரில் பல கோடி மதிப்பிலான நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து ரூ.350 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்ததாக ஆரோவில் பவுண்டேஷன் சேர்மன் பதவி வகித்து வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் பதவியில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி மீது விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.

ஆர்.என். ரவி தமிழக கவர்னராக நீடித்தால்தான் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இந்த டிரான்ஸ்ஃபர் நடந்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று வேடிக்கை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link