Share via:
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக
பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்ட பிறகும், அவரது
கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் டெல்லிக்குப் போய்விட்டார். டெல்லியில் இருந்து திரும்பிய
பிறகும் அந்த கோரிக்கையை மறுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு
அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது,
குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர்
இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம். ஆனால் அவர் நிரபராதி
என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் அப்படியே இருக்கிறது. ஆகவே பொன்முடிக்கு அமைச்சராக
பதவி பிரமாணம் செய்துவைக்க இயலாது” என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
கவர்னர் தாமதம் செய்தாலும் பதவிப்
பிரமாணம் செய்துவைத்துவிடுவார் என்று ஸ்டாலின் நினைத்திருந்தார். இப்படி நேரடியாக மறுப்பு
தெரிவித்திருக்கும் நிலையில், சபாநாயகர் மூலம் பதவிப் பிரமாணம் செய்யலாமா அல்லது நீதிமன்றத்துக்குப்
போகலாமா என்ற குழப்பத்தில் தி.மு.க. தவித்து வருகிறது.