Share via:
அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 2நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசும்போது, அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்தார்.
மேலும் நீட், கிளாட் போன்ற தேர்வுகள் பொதுத்தேர்வு தேதிகளை இடையூறு செய்யாத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 3 வகையாக அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளிகளில் மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக விடப்பட்ட விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளதாகவும் அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.