Share via:
கூகுள் மேப் காட்டிய வழியில் பயணித்த போது கார் ஆற்றில் கவிழ்ந்து 2பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமாளி திரைப்படத்தில் கூகுள் மேப் காட்டிய வழியில் செல்லும் யோகிபாபு பல்வேறு இன்னல்களை சந்திப்பதையும், ஆட்டோக்காரருக்கு தெரியாத வழியா என்று ஜெயம்ரவி அவரை சரியான இடத்திற்கு கொண்டு செல்வதுமான காட்சிகள் இப்போது இந்த செய்திக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.
வழி தெரியாத இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ராய்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக கூகுள்மேப்பில் முகவரியை டைப் செய்து அது சொல்லும் டைரக்ஷனில் வழக்கத்தில் உள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாமல், உணவு, மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்பவர்கள், கூரியர் டெலிவரி செய்பவர்கள் என அனைவருக்கும் கூகுள் மேப் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அருகே காரில் சென்று கொண்டிருந்த 2 பேர் கூகுள் மேப்பை பார்த்தபடியே காரை இயக்கியுள்ளனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த விப்தில் காருக்குள் இருந்த 2 பேரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூகுள் மேப் பார்த்த போது, வண்டி ஓட்டுவதில் கவனம் சிதறி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த 2 பேரும் மராட்டிய மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.