Share via:
இரண்டாவது முறையாக
குண்டர் சட்டத்தில் சிக்கியிருக்கும் சவுக்கு சங்கருக்கு சவுக்கு சங்கருக்கு மீண்டும்
இடைக்கால நிவாரணம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். அனைத்து வழக்குகளிலும் மேற்கொண்டு
நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராக
வந்த சவுக்கு சங்கர், ‘என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு தி.மு.க அரசு இருக்கிறது. அதனால்தான்
என் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது” என்று ஆவேசம் காட்டினார்.
இதையடுத்து பேசிய
சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ‘நான்கு நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம்
சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டாசை ரத்து செய்தது. சங்கர் பேட்டியில் பொது அமைதிக்கு
எந்த குந்தமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுறைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது.
அந்த வீடியோ வைத்து 17 வழக்குகள் போட்டார்கள். எங்கே அவர் வெளியில் வந்துவிடுவோரோ என
அனைத்து வழக்குகளிலும் அவசரமாக கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கரின்
தாய் தாக்கல் செய்தமனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதனால் அவசரமாக
கைது காண்பிக்க ஆரம்பித்தார்கள்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும்போது மதுரை மாற்றப்பட்டுள்ளார்.
எந்த பெண் காவலர்கள்
குறித்து தவறாக பேசியதாக கூறினார்களோ, அதே பெண் போலீஸ்காரர்களை வைத்து தண்ணீர் குடிக்க
முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாமல் இருக்கும் அளவிற்கு அவர்களை சவுக்கு சங்கர் உடன்
அனுப்புகிறார்கள்.
பேரறிவாளன் தாய் அற்புதம்மாளை
போல தற்போது கமலா அம்மா சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். திரும்பவும்
இந்த அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் ஒரு விஷயத்தை கூறுகிறோம். நீங்கள் போடும் வழக்கு
தூக்கு தண்டனை பெரும் வழக்கல்ல. ஐந்து வருடம் தண்டனை கிடைத்தாலும் திரும்பவும்
வந்து சங்கர் பேசத்தானே போகிறார். தண்டனை பெற்றவுடன் திரும்பவும் வந்து அவர் பேசத்தான்
போகிறார். அப்போது என்ன கொன்று விடுவார்களா? எத்தனை நாட்கள் உள்ளே வைத்திருக்க முடியும்?’’
என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் சாதாரணமாக
ஒரு யூடியூப் வைத்திருக்கும் சவுக்கு சங்கரால் எப்படி உச்சநீதிமன்றத்தை சர்வசாதாரணமாக
அணுக முடிகிறது, மிகப்பெரும் வழக்கறிஞர்களை நியமித்து கேஸ் வாதாட முடிகிறது என்ற கேள்வி
எழுகிறது. இதற்கு அனைவருமே எடப்பாடி பழனிசாமியையே கை காட்டுகிறார்கள். அ.தி.மு.க.வின்
பாதுகாப்பில் இருக்கும் சவுக்கு சங்கருக்காக இதுவரை எடப்பாடி பழனிசாமி 2 கோடி ரூபாய்
செலவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.