Share via:
ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் (செப்.28) அக்டோபர் 12ம் தேதிவரை ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தினந்தோறும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால், ‘‘சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் (செப்.28) வருகிற அக்டோபர் மாதம் 12ம் தேதிவரை இவ்வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வகையில் காலை 6.25 (சப்தகிரி எக்ஸ்பிரஸ்), பிற்பகல் 2.15 மணிக்கு (திருப்பதி எக்ஸ்பிரஸ்), மாலை 4.35 (கருடாத்திரி எக்ஸ்பிரஸ்) ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் மறுமார்க்கமாக 3 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் என மொத்தம் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களும், கல்லூரி மற்றும் வேலைக்காக செல்லும் பயணிகளும் அவதிப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.