Share via:
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் இன்று (செப்.5) உலகளவில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை த்ரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் அடித்து துவம்சம் செய்துள்ளது மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஏ.ஐ. காட்சிகள்தான்.
யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். படத்தின் டிரெய்லர் ரிலீசான போது டி ஏஜிங் தொழில்நுட்பத்தின்படி விஜய்யின் சிறு வயது கதாபாத்திரம் பல இடங்களில் பலனளிக்கவில்லை என்ற எதிர்மறை விமர்சனத்தை ஆங்காங்கே கேட்க முடிகிறது.
தமிழகத்தை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கோட் திரைப்படம் அதிகாலை 4 மணியளவில் திரையிடப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் ரசிகைகள் செய்த விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கேரள மாநிலம் தம்பானூர் பகுதியில் உள்ள நியூ திரையரங்கில் இரண்டாவது காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் நடிகர் விஜய்யின் ரசிகைகள் மன்றம் மொத்தமாக வாங்கியுள்ளனர். இந்த பெண் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டு 9 வருடங்களே ஆன நிலையில் தியேட்டரில் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. வெறித்தனமான சம்பவமாக இருக்கிறதே என்கிறார்கள் ரசிகர்கள்.