வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வருகையில் கோ பேக் மோடி டிரெண்டிங் ஆவடு உண்டு. அதே பாணியில் இன்று கோ பேக் அமித்ஷா போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சி அறிவித்து இருப்பதால் சென்னையில் பரபரப்பு நிலவுகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கிறது. இந்தத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று வெள்ளிக்கிழமை வருகிறார்கள். இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், சாலை மார்க்கமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு செல்ல உள்ளார். அதன்பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, டெல்லி செல்லவுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தமிழர் செல்வப்பெருந்தகை, ‘’சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை  நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துகிற வகையில்  மாலை 4 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, கலைஞர் கருணாநிதி பொன்விழா வளைவு  கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது’’ என்று அறிவித்துள்ளார்.

இதையொட்டி, ‘’நல்லவர்களை வரவேற்கும் தமிழ் மண் இது. குற்றவாளிகளையும் கொலைகாரர்கரையும் இம்மண் வரவேற்பது இல்லை. தமிழ்நாட்டின் விரோதி அமித்ஷாவே திரும்பி போ.. பல குற்றங்களை சுமந்து தன் பாவங்களை கும்ப மேளாவில் குளித்து நீக்கி விடலாம் என கற்பனையில் வாழும் அமித்ஷாவே திரும்பி போ…’’ என்று கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் சென்னை  வருகை ஒட்டி சென்னை விமான நிலையம், அவர்கள் தங்கி செல்ல உள்ள கிண்டி கவர்னர் மாளிகை, அவர்கள் பயணிக்கும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க.வினர், ‘’நாலு பேருக்கு மேல அந்தக் கூட்டத்துக்கு வர மாட்டாங்களே… ஆள் ஏற்பாடு செய்ய வேண்டுமா செல்வப்பெருந்தகை?’’ என்று கேலி செய்கிறார்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link