Share via:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று உரக்கக் குரல் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார் ஸ்டாலின். நீட் தேர்வை தடுத்து நிறுத்தும் ரகசியம் தெரியும் ஓட்டுப் போடுங்கள், சொல்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின். இவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி மக்களும் ஓட்டுப் போட்டார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க.வின் முகம் மாறிவிட்டது. நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று உதயநிதி ஆதிகாலத்துப் பாட்டையே திருப்பிப் பாடினார். ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் உயரத்துக்குப் போய்விட்டார். அதாவது, ‘நாங்க எதுக்கு டாஸ்மாக்கை மூடணும், நீங்க குடிக்கிறதை நிறுத்துங்க, மூடிட்டுப் போறோம்’’ என்று புது வகை நடிப்பைக் காட்டுகிறார்.
தொலைக்காட்சியைத் திறந்தாலே ஸ்டாலின் வருகிறார். ‘’என் அன்புப் பிள்ளைகளே ஒரு தந்தையாக கெஞ்சிக் கேட்கிறேன். போதைக்கு அடிமையாகிவிடாதீர்கள். குடி என்பது மோசமான பழக்கம், அதில் மட்டும் மாட்டிக்கொள்ளாதீர்கள்’’ என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அதேநேரம், டாஸ்மாக்கில் குடிமகன்கள் யாரும் வரிசையில் நின்று கஷ்டப்படக் கூடாது என்பதற்காக டபுள் கவுண்டர் எனும் புதிய வசூல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு மாதிரியும் ஆட்சிக்குப் பிறகு ஒரு மாதிரியும் பேசிட்டு அரசியலில் இருக்கிறதை விட சினிமாவுல நடிக்கப் போங்க, நடிகர் திலகத்தை விட நல்லா நடிப்பீங்க என்று ஆலோசனை சொல்கிறார்கள் மக்கள்.
தயவுசெஞ்சு அரசியலில் இருந்து நடிக்காமல் கிளம்புங்க ஸ்டாலின், நாடு நன்றாக இருக்கட்டும்.