News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று டாக்டர் ராமதாஸ்க்கு 86ம் ஆண்டு பிறந்த நாள் விழா. விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது போன்று டாக்டர் ராமதாஸ்க்கு இப்போதே பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாராம் அன்புமணி.

டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அன்புமணி, ‘’ஆயிரம் பிறை கண்டும் அயராத ஆலமரம் மருத்துவர் அய்யா அவர்களின் 86-ஆம் பிறந்தநாளில் சமூகநீதி காக்க உறுதியேற்போம்! அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் வாழ்த்து கொண்டிருக்கும் தமிழ்க்குலத்தின் முதல்வன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இன்று 86-ஆம் பிறந்தநாள்.

ஆயிரம் பிறை கண்டும் இன்னும் ஓய்வு என்பதை அறியாமல் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பிதாமகன் அவர். இளம் வயதில் கல்விக்காக அவர் பட்ட பாடுகள் தான், எனக்கிருந்த தடைகள் வேறு எவருக்கும் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், இன்றைய தலைமுறை எளிதாக கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் போராடி பெற்றுத்தர வைத்திருக்கிறது.

 அந்த பெரிய மனிதரை. 6 வகையான இட ஒதுக்கீட்டில் தொடங்கி தமிழ்நாட்டு மாணவர்களை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்தது வரை தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான புரட்சிகளை தலைமையேற்று சாதித்த சமூகநீதிக் காவலர் அவர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும், 35வயதில் இந்தியாவின் இளம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் போராளியாகவும் பொறுப்பேற்று நாட்டு மக்களக்கு பல்வேறு சேவைகளை செய்தது, அதற்காக பரவேறு விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது உள்ளிட்ட நான் பெற்ற பேறுகள் அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் அய்யா.

 என்னைப்போலவே, உலகின் 140 நாடுகளில் பல்வேறு பெரும் பொறுப்புகளை வகித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு காரணமான தனிப்பெரும் நாயகன் மருத்துவர் அய்யா. ஆனாலும், அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரே ஒரு முறை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று தமிழர்களிடம் கெஞ்சிப் பார்த்து வேலைக்கு ஆகவில்லை, ஆகவே, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு குறிவைத்து கெஞ்சிக்கொண்டு இருக்கிறாராம். அதனால்தான் மத்திய அரசு பட்ஜெட் குறித்து பேசும்போது, ‘எங்களுக்கு 25 எம்.பி. குடுங்க’ என்று கேட்டாராம்.

அன்புமணி ஆசை நிறைவேறுமா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link