Share via:
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட காலத்தில்
இருந்தே காயத்ரி ரகுராமுக்கும் அவருக்கும் மோதல் நிலவியது. ஒரு கட்டத்தில் காயத்ரி
ரகுராமுக்கு எதிராக அண்ணாமலை வார் ரூம் தொடர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அ.தி.மு.க.வுக்குத்
தாவினார்.
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்த காயத்ரி
ரகுராமுக்கு நல்ல பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும்
நடக்கவில்லை. அது மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக, ’யார் அந்த சார்’ போராட்டத்துக்கு
வந்த காயத்ரி ரகுராமுக்கும் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கும் மேடையிலே பிரச்னை உருவானது.
இதையடுத்து எந்த நேரமும் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்படலாம்
என்று பலரும் கருத்து தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் திடீரென அ.தி.மு.க.வில் இருந்து
காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக ஒரு கடிதம் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துடன் வெளியானது.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகே, அது அண்ணாமலை டீம் வேண்டுமென்றே காயத்ரி ரகுராமுக்கு எதிராக
வெளியிட்ட போலி கடிதம் என்பது தெரியவந்தது.
போலி கடிதம் வெளியிட்ட அன்ணாமலை ஆட்களுக்கு அ.தி.மு.க.வினர் கண்டனம்
தெரிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் காயத்ரி ரகுராம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே, இங்கே இருப்பதால் எந்த
பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்குப் போவதா அல்லது விஜய் கட்சிக்குப் போவதா என்று
யோசித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்தை சந்தித்துப்
பேசியிருப்பவர் புஸ்ஸி ஆனந்த்திடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம்.
இப்படி அலையவிடுறாங்களே…

