Share via:
அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி இணைந்து கூட்டணியை உறுதி
செய்த பிறகும் அண்ணாமலை அமைதியாக இருப்பதில்லை. போகிற இடமெல்லாம் பா.ஜ.க. ஆட்சி என்றே
பேசி வருகிறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சீட் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம்
வம்பிழுத்து வருகிறார். இதற்கு சீனியர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று எடப்பாடி
பழனிசாமி உத்தரவு போட்டுவிட்டார்.
அண்ணாமலையின் வாய் சவடாலை புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட
தலைவர்கள் யாருமே விரும்பவில்லை. அண்ணாமலை மீது டெல்லிக்குப் புகார் கொடுத்த பிறகும்
நடவடிக்கை எதுவும் எடுப்பதாக இல்லை. இந்த நிலையில் மீண்டும் காயத்ரி ரகுராம் தன்னுடைய
அட்டாக் அஸ்திரத்தை அண்ணாமலை மீது வீசியிருக்கிறார்.
அண்ணாமலை டம்மி, சமூக ஊடகத்தில் ஆட்களை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில்
பெரிய சக்தி என்பது போன்று பிம்பத்தை உருவாக்குகிறார் என்று ஒரு பேட்டியில் அடித்துத்
தொங்கவிட்டார். அண்ணாமலைக்கு சரியான போட்டி என்று அ.தி.முகவினர் வாய் மூடி சிரிக்கிறார்கள்.
இதை எதிர்பார்க்காத அண்ணாமலை ஆர்மி அலறுகிறது. அவர்கள், ‘’அண்ணாமலை
அண்ணா குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் காயத்ரி
ரகுராம் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிமுக IT விங்கை சேர்ந்தவர்கள், அதிமுக தொண்டர்கள்,
அனுதாபிகள் பிஜேபி தலைவர்களை அவதூறு செய்வது, கேவலமாக எழுதுவதற்கு பதிலடி கொடுக்கும்
பிஜேபி தொண்டர்கள், சமூக ஊடக நண்பர்களை சுட்டிக்காட்டி கட்சியின் முன்னாள், இந்நாள்
நிர்வாகிகள் யார் தூண்டுதலில் மிரட்டல் தொணியில் பதிவிடுகிறார்கள் என்பதையும் தெளிவுப்படுத்த
வேண்டிய கடமையும் தலைமைக்கு உள்ளது. அப்படி வைக்கவில்லை என்றால் இதில் தமிழக பாஜக தலைமைக்கும்
சம்மந்தம் உள்ளது என்றே எல்லோருக்கும் சந்தேகம் உள்ளபடியே தெரியும்.
இந்த நேரத்தில் அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைக்கவில்லை என்றால்
அதன் பின்பு தினம் தோறும் சமூக ஊடகத்தில் உள்ள ஒவ்வொரு பாஜக தொண்டர்களும் தமிழக பாஜக
தலைமைக்கு எதிராக கருத்து பதிவிடத் தொடங்குவதை யார் தடுத்தாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக
மாறிவிடும்’’ என்று கொதிக்கிறார்கள்.
அதேநேரத்தில் காயத்ரிக்கு கடுமையாக சமூகவலைதளத்தில் பதிவு போடுகிறார்கள்.
‘’நீ பச்சோந்தி.. எங்கே வேண்டுமானாலும்
சென்று நிறம் மாற்றி கொள்வாய் !! உனக்கெல்லாம் மரியாதை கொடுப்பது எங்கள் வேலை
இல்லை. உங்கள் தலைவர்கள் பேச தைரியம்
இல்லாமல் நேரத்தை வீணாக்கியதற்கும், திமுக கூட்டணி தலைவர்கள் சீட்டுக்கு பிச்சை எடுப்பதற்கு
வாயை மூடியதற்கும், எங்கள்
தலைவர் பொறுப்பாக முடியாது !!! உங்கள் தலைவர்கள் வாயில் என்ன கொழுக்கட்டையும், குளிப்பணியாரமும் இருந்ததா?’’ என்று ஆபாசமாகப் பேசுகிறார்கள்.
சண்டை சூடு பிடிக்குது.