News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

கடந்த செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஆராதனை செய்யப்பட்டன.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில்  கரைக்க தேவையான அனைத்து பாதுகாப்பு பணிகளையும் சென்னை மாநகர காவல்துறை வெகு சிறப்பாக செய்திருந்தது.

சென்னையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட 5 ஆயிரம் சிலைகளை 24ம் தேதி வரை (நேற்று) கடலில் கரைப்பதற்கு பொது மக்களுக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இதனால் கடந்த 6 நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலமாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு கடல், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வந்தன.

இதுவரையில் சென்னையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது போன்று, சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேளதாளங்களுடன் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வழிபட்டனர்.

சிலைகள் கரைப்புப் பணிக்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் உள்ளிட்ட 4 இட்ஙகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link