News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், கட்சிக் கொடி அறிவிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. சரித்திரதின புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படிப்பட்ட வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024ஆகஸ்டு 22.

 

தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும், மாறப்போகும் நம் வீரக்கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலைய செயலகத்தில், அறிமுகப்படுத்தி, கழக கொடிப் பாடலை வெளியிட்டு கழக கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நாளை முதல்  நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link