News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் ஃபார்முலா ரேஸ் நடத்தப்போவதாக உதயநிதி அறிவிப்பு செய்ததில் இருந்தே, இந்த போட்டி நடிகை நிவேதா பெத்துராஜ் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நடத்தப்படுகிறது என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து செய்தி பரப்பினார்கள்.

ரோடு சரியாக இல்லை, ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் நாய் ரேஸ் நடப்பதாகக் கிண்டல் அடித்தார்.

நீதிமன்ற வழக்கு, மழை மிரட்டல் போன்ற பஞ்சாயத்துக்களைக் கடந்து ஒருவழியாக ரேஸை நடத்தி முடித்துவிட்டார் உதயநிதி. இதனை உலகமகா வெற்றி என்று உடன்பிறப்புகள் கொண்டாடி வருகிறார்கள். அதன் பிறகும் அ.தி.மு.க.வினர், ‘ஒரு பெண் நினைத்தால் ரேஸ் நடத்திக் காட்டுவார்’ என்று கிண்டல் செய்தார்கள்.

ரேஸ் நடக்கும் வரையிலும் அமைதி காத்த உடன்பிறப்புகள் இப்போது திருப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சோபன்பாபு கதையில் தொடங்கி எம்.ஜி.ஆருக்குச் செய்த துரோகம் வரையிலும் எடுத்துப் போடுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, மூப்பனார் வீட்டில் கும்முற டப்பா டான்ஸ் ஆடிய நடிகை யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

அதை கடந்து போகாத அ.தி.மு.க.வினர், ‘’மூப்பனார் வீட்டு திருமணத்தில் பரத நாட்டிய கச்சேரி , செல்வி ஜெயலலிதா பரதமாடினார் , ஆனால் கருணாநிதி தெருத்தெருவாக கூத்துக்கட்டினார் அதுவும் காகிதப்பூ போன்ற டுபாக்கூர் ட்ராமாக்களுக்கு அந்த காகிதப்பூ தெருக்கூத்தில் மனோரமா கருணாநிதிக்கு ஜோடி. ஆனால் மனோரமா திரைப்படங்களில் நடிக்கத்துவங்கியதால் தெருக்கூத்தில் பங்கேற்க முடியல. அவருக்கு பதிலாக கருணாநிதிக்கு ஜோடியாக வந்தவர் தர்மா என்கிற ராசாத்தி அம்மா அவர்கள். இது எதுக்கு சொல்றேன்னா, பரத நாட்டியமும் கேவலமில்ல தெருக்கூத்தும் கேவலமில்ல. ஆனால் ஒரு கேவலமான கும்பல் இதை கொச்சைப்படுத்துவதாக நினைத்து தங்களுடைய தலைவரின் வரலாறை தேரை இழுத்து தெருவிலே விடும்…’’ என்று சொந்த தலைவரின் வரலாற்றை கொச்சைப்படுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link