Share via:
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஸ்டாலின் அரசு கும்பகர்ண தூக்கத்தில்
இருக்கிறது. அதனாலே முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிட்டு சிலந்தியாற்றின் குறுக்கே
அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
தொடங்கி பா.ஜ.க., டி.டி.வி.தினகரன் வரையிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இத்தனை நாட்களும் தி.மு.க.வுக்கு ஆதரவாக மட்டுமே
பேசிவரும் கவிஞர் வைரமுத்து முல்லைப் பெரியாறு குறித்து ஆக்ரோஷமாக கவிதை ஒன்று படைத்திருக்கிறார்.
தி.மு.க. அரசு மெளனம் சாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவிதை வெளியாகியிருப்பதாக
தி.மு.க.வினர் கொதிக்கிறார்கள்.
அவரது கவிதை இது தான்.
முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல;
தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்
‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’ என்று சிலப்பதிகாரம் பாடிய
ஜீவநதிக்குக் கல்லறைகட்ட விடமாட்டோம்.
வரலாறு மற்றும் புவியியல் அடிப்படையில் முல்லைப் பெரியாறு மீது
தமிழர்களுக்குத் தார்மீக உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின்
ஒப்புதல் இல்லாமல் அணைகட்ட முடியாது என்ற சட்ட உரிமையும் எமக்கிருக்கிறது.
ஐந்து மாவட்டங்கள் நெல்லற்றுப் புல்லற்றுப் பாலைவனமாக விடமாட்டோம்
கேரளத்தை மதிக்கிறோம் ஆனால் முல்லைப் பெரியாற்றைத் துதிக்கிறோம் முல்லைப் பெரியாறு
எங்கள் தாய்ப்பால்; தாயின் மார்பகத்தை அறிந்தோ அறியாமலோ அரிந்து விடாதீர்கள்’ என்று
ஆவேசமாக கூறியிருக்கிறார்.
தி.மு.க.வுடன் அவருக்கு ஏதோ மனக்கசப்பு அதனாலே இப்படி திடீரென
முல்லைப் பெரியாறுக்கு ஆவேசம் காட்டியிருக்கிறார் என்கிறார்கள். உண்மையா என்பதை கவிஞரே
சொல்ல வேண்டும்.