News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த செங்கோட்டையனை அத்தனை பொறுப்புகளில் இருந்து எடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் செங்கோட்டையன். இதையடுத்து அதிமுகவில் இருந்து வெளியே இருக்கும் சசிகலா, பன்னீர், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதியாகிவிட்டது.

அதிமுகவை விட எதிர்க்கட்சிகளே பாஜகவின் ஸ்கெட்ச் குறித்து ரொம்பவும் கவலைப்படுகிறார்கள். இதுகுறித்து பேசும் திருமாவளவன், ‘’அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கே.ஏ.செங்கோட்டைய தன்னியல்பாக முயற்சி செய்தால் அதை பராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரை பாஜக இயக்குகிறது என்றால் அது அதிமுகவுக்கு நல்லது அல்ல என ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

ஐயப்பட்டதைபோலவே, அவருக்கு பின்னால் பாஜக இருப்பதை டெல்லியில் அவர் அமிஷ் ஷாவை சந்தித்ததின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதிமுகவை கூட்டணியில் இணைத்துகொண்டே பாஜக கபளீகரம் செய்ய முயற்சிக்கிறது. இதை ஏற்கனவே சுட்டிக்காட்டினோம். அண்ணன் எடப்பாழி பழனிசாமி உட்பட பலருக்கும் என்மீது எரிச்சல் வந்தது. அதிமுகவை தனியே விடாமலும் கூட்டணியில் இருந்தாலும் தனித்து செயல்படவிடாமல் அதிமுகவை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்பதை அதிமுக தொண்டர்கள் உணர தொடங்கியிருப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட  ஒருவரை (கே.ஏ. செங்கோட்டையன்) அமிஷ் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் எந்த துணிச்சலில் சந்தித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டவரை அழைத்து அரசியல் பேசுகிறார்கள் என்றால் அதிமுக, அதிமுக தலைவர் (இபிஎஸ்) பற்றி அவர்கள் என்ன மதிப்பீடு செய்திருக்கிறார்கள்? அதிமுகவினரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன்பிறகும் பாஜவுடன்தான் அதிமுக கூட்டணி என்றால் அதற்கு தொண்டர்களே பதில் சொல்வார்கள்’’ என்று கடுமை காட்டியிருக்கிறார்.

நியாயமான கேள்வி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link