News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

கடந்த 10ம் தேதி புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த சந்திர பிரியங்கா தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். அத்துடன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் பல பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ராஜினாமா கடிதத்தில், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக பணியாற்ற முடியாது. அதனால் தனது பதவியை  ராஜினாமா செய்கிறேன் என்றும், புதுச்சேரியில் உள்ள இரு சமூகங்களான வன்னியர் மற்றும் தலத் சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்கு அயராது பாடுபட்டு வருகிறார்கள். எனவே காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன் உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், சந்திர பிரியங்கா பதவி விலகிய விவகாரத்தில் தனக்கும், முதலமைச்ச்ர ரங்கசாமிக்கும் இடையில் நடந்த உரையாடலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுவெளியில் கசியவிட்டார். எனவே ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link