News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் நியூ ஹேர் ஸ்டைல் புகைப்படம் தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு பெற்றாலும் கூட தற்போது களத்தில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்கிறார். இளைஞர்கள், ரசிகைகள் என எம்.எஸ்.தோனியை குறித்த ஏதேனும் ஒரு டாப்பிக் இணையத்தில் தினந்தோறும் டிரெண்டிங்கில்தான் உள்ளது.

கிரிக்கெட்டுடன் சேர்த்து சினிமா தயாரிப்புகளிலும் இறங்கியுள்ள எம்.எஸ்.தோனி ஒரு ஹீரோவைப் போல காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு எம்.எஸ்.தோனி புதிய ஹேர்ஸ்டைலுடன் கண்களில் கூலர் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிரபல சிகையலங்கார நிபுணரான ஆலிம் ஹகீம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தில் தோனி படு ஸ்டைலாக காட்சியளிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று டிரெண்டிங்காக்கப்படுகிறது. அவரது முகவெட்டுக்கு இந்த புதிய ஹேர்ஸ்டைல் ஒத்துப்போவதாக இளைஞர்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இனி ரசிகர்களின் புது  ஹேர் ஸ்டைல் இதுவாகத்தான் இருக்கும் என்றும் ரசிகைகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link