Share via:
பகுத்தறிவு பேசி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது பா.ஜ.க.வின்
வால் பிடிக்கும் கட்சியாகவே மாறி வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த உதயநிதியின்
கால்களுக்கு மலர்கள் தூவி வரவேற்பதும், அம்மானுக்கு மாநாடு நடத்துவதும் தி.மு.க.விற்கு
கேவலம் என்று கடும் கண்டனம் எழுந்துவருகிறது.
முருகனுக்கு மாநாடு நடத்தியது போலவே மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க
அடுத்து அம்மனுக்கு மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு கடும்
விமர்சனத்துக்கு ஆளானது. ஆனால், அதை பற்றி தி.மு.க.வினர் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
அம்மன் கோயில் விழா என்றால் கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் நடத்த
முடியும் என்பதால் இதை ஒரு தேர்தல் யுக்தியாகவே பார்க்கிறார்கள். அதோடு ஆன்மிகத்துக்கு
எதிரான கட்சி என்று யாருமே இனிமேல் பேச முடியாத வகையில் வாயை அடைத்திருக்கிறார்கள்.
அதேநேரம், தி.மு.க.வை இப்போதே தடுத்து நிறுத்தவில்லை என்றால் எல்லா
விழாக்களிலும் கடவுள் பூஜை செய்துவிட்டு தொடங்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்று தி.மு.க.
மூத்த புள்ளிகளே வேதனைப்படுகிறார்கள்.
இந்த நிலையில் விழாவில் கலந்துகொள்ள வந்த உதயநிதியின் காலுக்கு
மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அந்த வரவேற்பை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டுள்ளார்.
இத்தனை நடந்த பிறகும் திராவிட மாடல் என்பதும் தி.மு.க.வை பகுத்தறிவுக்
கட்சி என்பதும் உடன்பிறப்புகளுக்கே அவமானம் தான்.