News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மணிப்பூரில் வானில் திடீரென்று சந்தேகத்திற்கிடமான மர்மப் பொருள் பறந்ததால் சில மணி நேரம் பதற்றம் நிலவியது.

 

மணிப்பூரில் நேற்று (நவ.19) பிற்பகல் 2 மணியளவில் பறக்கும் தட்டுகள் திடீரென்று பறந்து கொண்டிருந்தது. இது குறித்து உடனடியாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவற்றை தேடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை 2 ரபேல் ஜெட் விமானங்களை தேடுதல் பணியில் ஈடுபடுத்தியது.

 

போர் விமானம் வான்வெளியில் தரையில் இருந்து மிகக்குறைந்த உயரத்திலேயே பறந்து தேடுதல் வேட்டை நடத்தியதால் அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் எந்த தட்டும் பதிவாகவில்லை. பறக்கும் தட்டு பரபரப்பை முன்னிட்டு மதியம் சுமார் 2.30 மணியளவில் மணிப்பூர் மாநில தலைநகரான இம்பால் விமான நிலையத்தில் 2 விமான சேவை பாதிக்கப்பட்டது.

 

இருப்பினும் இம்பால் விமான நிலையம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளில் பறக்கும் தட்டுகள் பதிவாகி இருப்பதால் அதனை வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. பறக்கும் தட்டும் பரபரப்பை முன்னிட்டு பாதுகாப்புத்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மணிப்பூரில் திடீரென்று வானில் பறந்தது உண்மையில் பறக்கும் தட்டுகள்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. வேற்று கிரகவாசிகள் குறித்த எந்த கோட்பாடும் இதுவரை நிரூபிக்கப்படாத நிலையில், மணிப்பூர் சம்பவம் பொது மக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link