Share via:
வழக்கமாக குளிர் பிரதேசங்களான
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் மட்டுமே மலர்க் கண்காட்சிகள் நடத்தப்படும்.
இதனை எல்லோரும் பார்த்து ரசிக்க வாய்ப்பு இருக்காது. எனவே, அப்படியொரு மலர்க் கண்காட்சி
சென்னையில் நடந்தால் எப்படியிருக்கும் என்று பரிசோதனை முயற்சியாக கடந்த ஜூன் மாதம்
ஒரு மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது.
அதற்கு நிறைய வரவேற்பு கிடைத்ததை
அடுத்து, இந்த ஆண்டு சென்னை செம்மொழி பூங்காவில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவுக்கு, அமைச்சர்கள்
மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,
மேயர் பிரியா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் எழிலன், துணை மேயர்
எம்.மகேஷ்குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன்,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் ஆபூர்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி,
மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட
உள்ளது. 10 லட்சம் மலர்கள் இந்த கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. மலர் கண்காட்சி
நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, குழந்தைகளுக்கு ரூ. 75 நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனை மக்கள் கூட்டம் கூட்டமாக
வந்து பார்த்துவருகிறார்கள். குழந்தைகள் குஷியாகிறார்கள். சென்னை மக்களே நல்ல வாய்ப்பை
தவற விடாதீங்க…