Share via:
நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன்கல்யாண், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்துள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், பலரின் வீடுகள், உடமைகள் சேதமடைந்துள்ளன. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நிவாரணநிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன்கல்யாண், ஆந்திர மாநிலத்திற்கு வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.1கோடி வழங்கினார். அதுமட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4கோடியை தனியாக வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தெலுங்கானாவுக்கும் நிவாரணநிதி வழங்கியுள்ளார். அதன்படி தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த அவர் ரூ.1 கோடிக்கான காசோலையை வெள்ள நிவாரண நிதியாக வழங்கினார். இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.