News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

முதலில் கைதி-2, பிறகுதான் ரோலக்ஸ் திரைப்படத்தை எடுக்க உள்ளேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வருகிற தீபாவளி பண்டிகையன்று நடிகர் கார்த்திக் நடிப்பில் தயாராகி உள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் ஜப்பான் திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியானது.

 

இவ்விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூர்யா, தமன்னா, யுவன், இயக்குனர்கள் சிறுத்தை சிவா, எச்.வினோத் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘‘கைதி 2 படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். படத்திற்கான வேலைகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலைவர் 171 திரைப்படத்தை முடித்த பிறகு இந்தவேலைகளை வேகமாக தொடங்குவேன் என்று தெரிவித்தார்.

 

வருகிற மார்ச் மாதம் தலைவர் 171 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கு பிறகு கைதி2 திரைப்படத்திற்கான கதை எழுதும் பணியை தொடங்குவேன் என்றும் அப்போது லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இருப்பினும் நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் காம்போவில் ரோலக்ஸ் திரைப்படம் தான் முதலில் இயக்கப்படும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இத்தகவலை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link