Share via:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 87ம்
ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி லோக்கல் லீடர்
வரை நிறைய பேர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இன்று அன்புமணி நேரில்
வந்து சரண் அடையவில்லை என்றால் சட்ட நடவடிக்கை தீவிரம் அடையும் என்று வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று பாமக ராமதாஸ்க்கு அண்ணாமலை, ‘’40 ஆண்டுகளுக்கும் மேலாக
, தமிழகத்தின் நலனுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும்
அயராது உழைத்து வரும் ஐயா ராமதாஸ் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது
மக்கள் பணிகள் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்..’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அதேநேரம் அன்புமணிக்கு அவரது சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அன்புமணி சுற்றுப்பயணத்தை தடை செய்ய வேண்டும், கொடியை தடை செய்ய
வேண்டும் என்றெல்லாம் பொங்கிவரும் ராமதாஸ், எல்லா விஷயங்களுக்கும் இன்று இறுதி முடிவு
எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வாலாற்றை அய்யா
என்ற பெயரில் சேரன் இயக்க இருக்கிறார்.
ஆக, ஏதோ ஒரு பெரிய விஷயத்தை நோக்கி நகர்கிறார் டாக்டர் ராமதாஸ்.
அன்புமணிக்கு ஆப்பு வருமா..?
சினிமா என்றாலே எதிர்ப்பு தெரிவித்துவந்த ராமதாஸ் வாழ்க்கை சினிமாவாக
மாறுவதே ஆச்சர்யம்.