Share via:
சவுக்கு சங்கரின் கூட்டாளி என்று கருதப்படும் ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸை
போலீஸார் டெல்லியில் கைது செய்திருக்கிறார்கள். இதையடுத்து சவுக்குக்கு நெருக்கமான
மற்றும் ஒரு நபரும் கைது செய்யப்பட இருப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த 2022ல் கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது அரசியலில்
இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே என்று பேசியதற்காக ஃபெலிக்ஸ்
மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி
வெளியில் இருந்தார் ஜெரால்ட் பெலிக்ஸ்.
சமீபத்தில் இவரது ரெட்பிக்ஸ் சேனலில் கலந்துகொண்டு நேர்காணலில்
பெண் காவலர்கள் குறித்தும் காவலர்கள் குறித்தும் கடுமையாக பேசியிருந்தார் சவுக்கு சங்கர்.
இந்த அவதூறு பேச்சிற்காக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை அதிரடியாக கைது
செய்தனர்.
மீண்டும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் முதல் குற்றவாளியாக
சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி டெல்லியில் பதிங்கி தலைமறைவாக
இருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது இத்துடன் நிற்கப் போவதில்லை
என்கிறார்கள்.
அடுத்து சவுக்குக்கு நெருக்கமான இன்னொரு யூடியூப் புள்ளியும்,
அ.தி.மு.க.வில் இருக்கும் இன்னொரு விமர்சகரும் கைது செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.