பிரபல தொழில் அதிபரும் மனிதநேயமிக்க மனிதருமான ரத்தன் டாடா தனது 86 வது வயதில் நேற்று நள்ளிரவு  (அக்டோபர் 9) காலமானார்.

 

சூரத்தில் கடந்த 1937ம் ஆண்டு நவல் டாடா மற்றும் சுனு தம்பதியின் மகனாக பிறந்தவர் தான் ரத்தன் டாடா. இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த இவர், டாடா ஐ.பி.எம்.இல் பணியாற்றினார். அதிகளவு இந்தியப் பற்று கொண்ட அவர் தாயகம் திரும்பியதும் தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் இறங்கினார். அதைத்தொடர்ந்து டாடா நிறுவனத்தில் கீழ்த்தள பொறுப்புகளை வகித்து பின்னர் படிப்படியாக தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார்.

 

டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கிய அவர் டாடா நிறுவனத்தை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தி மிகப்பெரிய வெற்றியைக் கண்டார். சுண்ணாம்புக்கல் எடுப்பதில் தொடங்கி சூளைகளை கையாளும் பணிகள் வரை செய்த அவர் 1997ம் ஆண்டு டாடா குழுமத் தலைவராக பொறுப்பேற்றார்.

 

அவரது தலைமையில் கீழ் டாடா நிறுவனம் வந்த நிலையில் 50 சதவீதம் கூடுதல் லாபம் கிடைத்தது. அதன் பின்னர் 1991ம் ஆண்டு முதல் கடந்த 2012ம் ஆண்டு வரை டாடா குழும நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தார். 2012ம் ஆண்டு ஓய்வை அறிவித்த அவர் நடுத்தர மக்களின் நலனுக்காகவும் அவர்களின் கார்வாங்கும் கனவை நனவாக்கவும் டாடா நானோ காரை அறிமுகப்படுத்தினார்.

 

தொழில்துறையில் அவர் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. நாட்டின் முன்னணி தொழில் அதிபரான ரத்தன் டாடா தன்னம்பிக்கையால் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவியதுடன், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,500 கோடியை வாரி வழங்கினார்.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை சீராக இல்லாத காரணத்தாலும் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் சமூகவலைதள பக்கங்களில் அச்செய்தியை மறுத்து 7பதிவு வெளியிட்டார்.

 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு (அக்டோபர் 9) இப்பூவுலகைவிட்டு பிரிந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link