Share via:
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
பசுமைப்புரட்சியின் தந்தை என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தனது 98 வயதில் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11.20 மணியளவில் சென்னையில் காலமானார்.
கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவில் பசுமைப் புரட்சி தொடங்கிய காலகட்டத்தில், பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய பெருமை எம்.எஸ்.சுவாமிநாதனையே சேரும். விவசாயத்தை உயர்த்தி அரிசி தட்டுப்பாட்டை நீக்க, அதிநவீன அறிவியல் முறைகளை கண்டறிந்து அதிக மகசூல் தரும் விதைகளையும், பண்ணைக் கருவிகளையும் கண்டறிந்து புதுமைகளை புகுத்தினார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் 3 பத்மபூஷன் விருதுகளையும், எஸ்.எஸ். பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் மகசேசே விருதையும் பெற்றவர் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியராகவும், ஆராய்ச்சி நிர்வாகியாகவும், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றிய எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவின் அடையாளம் என்றே சொல்ல வேண்டும்.
1925ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தன்னுடைய 98வது வயதில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது இந்தியாவிற்கு பெரும் இழப்பு என்பது சோகமான உண்மை.