Share via:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.பா.ஜ.க.வுடன் தி.மு.க.வுக்கு கள்ளத்தொடர்பு..? போட்டு உடைக்கும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீச்சு விவகாரம் குறித்து பட்டும் படாமலும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரத்தை தி.மு.க.வினர், ‘இன்னமும் பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருப்பதாலே நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கடுமை காட்டவில்லை’ என்று விமர்சனம் செய்துவருகிறார்கள்.
கூட்டணியில் இல்லை என்று அறிவித்துவிட்டாலும் இன்னமும் எங்கேயும் பா.ஜ.க.வுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்களும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அ.தி.மு.க.வை இன்னமும் பா.ஜ.க.வின் அடிமைக் கட்சி என்றே அழைக்கிறார்கள்.
இந்த பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘’நாங்கள் 2015ம் ஆண்டு நிவாரணம் தந்தது போல அனைவருக்கும் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்த வேண்டும். அரசியலுக்காகவே ரேஷன் கடைகள் மூலம் நிவாரணம் தருகிறார்கள்.
டோக்கன் வாங்குவதற்காக ஒருநாள், பணத்தை வாங்க ஒருநாள் என்று மக்கள் அலைந்துகொண்டேஇருக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் எதிர்பார்க்கிறார்கள். இப்போது வெள்ளத்தை பார்வையிட வந்திருக்கும் மத்திய குழு ஓஹோவென என தமிழக அரசை பாராட்டி இருக்கிறது.
உண்மை என்னவென்றால் இன்னமும் மக்கள் மீட்கப்படவில்லை. மக்களை சந்தித்தால் தான் கள நிலவரம் என்னவென்று தெரியும். ஆனால், மத்திய குழுவை மக்கள் சந்திக்கவிடாமல் காவல் துறை மூலம் தடுத்துவிட்டு புகைப்படங்களை மட்டுமே காட்டியுள்ளனர். அவர்களும் பாராட்டியுள்ளனர். இதன் மூலம் தி.மு.கவுக்கு பா.ஜ.க.வுடன் உறவு இருப்பது உறுதியாகியுள்ளது’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுக்கு தி.மு.க. என்ன பதில் சொல்லப்போகுதோ…?