Share via:
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சமூகவலைதளங்களில்
அ.தி.மு.க.வினரே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க. வழக்கறிஞர்களே
சவுக்கு சங்கர் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியே வருவதற்கு உதவி செய்து வருகிறார்கள்.
இதற்கு என்ன பின்னணி என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மூன்று விஷயங்களில் அ.தி.மு.க.வுடன் சவுக்கு சங்கர் கூட்டணி வைத்திருந்தார்
என்று சொல்லப்படுகிறது. அவற்றில் முதலாவது, ஓ.பன்னீர்செல்வம் மீது அளவுக்கு அதிகமாக
விமர்சனம் செய்து அவரை அரசியல் கோமாளியாக மாற்ற வேண்டும் என்ற விவகாரம். இதனை செய்து
முடிப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே ஒப்புதல் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
கொடநாடு வழக்கில் முக்கிய
குற்றவாளி கனகராஜ் கொல்லபட்ட விபத்தில் தொடர்புடைய கார் சவுக்கின் நண்பரான ஒரு
பெண்மணிக்கு சொந்தமான கார் என்கிறார்கள். ஐ.ஜி.யான சுதாகர் அதை விசாரிக்க முயல
அவர் அதிகாரிகளால் தடுக்கபட்டார். இந்த விவகாரத்தில் தொடர்பு உருவானதாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது மிக முக்கியமான விஷயம்.
கடந்த ஆட்சியிலே போதைப் பொருள் விவகாரத்தை சவுக்கு சங்கர் கையில் எடுத்துக்கொண்டார்
என்றும் அதற்கு மாஜி அ.தி.மு.க. அமைச்சர்கள் துணை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வகையில் மாஜி அமைச்சருக்கும் சவுக்கு சங்கருக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றம்
போலீஸ் கையில் சிக்கியிருக்கிறதாம்.
இந்த விவகாரத்தில் மாஜி அமைச்சருக்கு
சம்மன் அனுப்பும்போது ஒட்டுமொத்த கூட்டு விவகாரமும் வெளியே வந்துவிடும் என்று தி.மு.க.வுக்கு
ஆதரவான அதிகாரிகள் வட்டம் தெரிவித்துவருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக
அரசியலில் பட்டாசு வெடிக்கும் என்கிறார்கள்.