Share via:
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்திவரும் வேளையில்
அ.தி.மு.க.வும் இருமொழிக் கொள்கை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர்
மும்மொழிக் கொள்கைக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் பார்க்கும்
நபர்களிடம் எல்லாம் கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார்கள்.
அந்த வகையில் மும்மொழி கொள்கைக்கு கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள்
எம்.எல்.ஏ விஜயகுமார் ஆதரவு தெரிவித்து கையெழுத்துப் போட்டார். அப்போது அவர், ’’தி.மு.க.
மொழியை வைத்து அரசியல் செய்கிறது. எனவே நான் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறேன்’’
என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தெரியவந்ததும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி
பழனிசாமி, கும்முடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமாரை அடிப்படைப் பொறுப்பில்
இருந்து தூக்கி அதிரடி காட்டியிருக்கிறார். எந்த நேரமும் பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி
பழனிசாமி இணைந்துவிடுவார் என்று பலரும் ஆருடம் சொல்லிவந்த நிலையில், ஒரு கையெழுத்துக்காக
கட்சியில் இருந்து தூக்கியிருக்கிறார் என்றால், நிச்சயம் பாஜக பக்கம் போகவே மாட்டார்
என்று அ.தி.மு.க.வினர் குஷியாகியுள்ளனர்.
அதேநேரம் பா.ஜ.க.வினர், ‘’இப்படித்தான் தளவாய் சுந்தரத்தைத் தூக்கினார்.
அடுத்து மீண்டும் அப்படியே சேர்த்துக்கொண்டார். அதெல்லாம் சும்மா கண் துடைப்பு’’ என்கிறார்கள்.
உண்மையா, பொய்யா என்பதை எடப்பாடி பழனிசாமியே நிரூபிக்க வேண்டும்.