Share via:

எடப்பாடி பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் இடையில் உரசல் நடைபெறுவதாக
ஒரு பேச்சு உலவி வரும் நிலையில், சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி
தலைமையில் இன்று 82 கழக மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் இணையும் காணொளிக் கலந்தாய்வுக்
கூட்டம் நடைபெற்றது. .இந்த கூட்டத்தில் வேலுமணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி மற்று
வேலுமணி ஆகிய நான்கு பேர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில்
இருந்தும் கழகச் செயலாலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதுவரை, தி.மு.க. மட்டுமே இது போன்ற ஆன்லைன் மீட்டிங் நடத்திவந்த நிலையில், எடப்பாடியும்
அப்டேட் ஆகியிருக்கிறார்.
யார் அந்த சார் என்பது அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரும் நம்பிக்கை
அளித்திருக்கிறது. ஆகவே, தி.மு.க. ஆட்சியில் மாணவிகள், பெண்கள், முதியவர்கள் என யாருக்குமே
பாதுகாப்பு இல்லை என்பதை வலியுறுத்தும் வகையில் மிகப்பெரும் போராட்டத்துக்கும் சுற்றுப்
பயணம் குறித்தும் இந்த மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது. வேலுமணி மகன் திருமணத்தில் எடப்பாடி
பழனிசாமி கலந்துகொள்ளாத விவகாரம் வெடிக்கக்கூடாது என்பதற்காகவே, வேலுமணிக்கு இந்தக்
கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தங்கமணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அனைவரும் அவரவர் ஊரில் இருந்த
நிலையில், வேலுமணி மட்டும் வரவழைக்கப்பட்டுள்ளார். நாளை நடைபெற இருக்கும் வேலுமணி மகன்
திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு
கொடுக்க இருக்கிறார்களாம். பா.ஜ.க. பற்றியும் கூட்டணி குறித்தும் யாரும் பேச வேண்டாம்
என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கப்பட்டது
என்பதால், யாரும் அது குறித்துப் பேசவில்லை.