Share via:
நேற்றைய தினம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எழுச்சிப்பயணம் மேற்கொண்ட
எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக பன்னீர்செல்வம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப்
பேசினார்.
அப்போது அவர், ‘’அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஒருவர் திமுகவில்
இணைந்தார். அதிமுகவில் எனக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை என்கிறார். நாம் நடவடிக்கை
எடுக்கவில்லை. திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை, அம்மாவின் ஆட்சியை வீழ்த்த நினைத்தார்,
அவராக வீழ்ந்துவிட்டார். கேடு நினைப்பார் கெட்டுப்போவார். இயக்கத்துக்கு துரோகம் இழைத்ததால்
வெளியேற்றப்பட்டார்.
அம்மா மறைவுக்குப் பிறகு எவ்வளவோ பிரச்னைகள். அம்மா அவருக்கு முதல்வர்
பதவி கொடுத்தார். முதல்வராக அமரவைத்த இயக்கம் அதிமுக என்ற நன்றியை மறந்துவிட்டார்.
எம்ஜிஆர் அழிக்க நினைத்த தீயசக்தியான திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளார். நான் ஏற்கனவே
குறிப்பிட்டேன் பி டீம் என்று, அது இப்போது நிரூபணமாகிவிட்டது.
எங்கள் கட்சியை நாங்கள் காப்பாற்றி கொள்வோம், ஆனால், உங்கள் கட்சியை
யாரும் காப்பாற்ற முடியாது. இங்கிருந்து போனவர்கள் சாதாரண ஆட்களா? ஆமை புகுந்த வீடு
போல ஓபிஎஸ் புகுந்த கட்சி முடிந்துபோய்விடும். ஸ்டாலின் அவர்களே எங்கள் இயக்கத்தில்
இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், செல்லாத காசுகளை உங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு
இருக்கிறீர்கள். அதிமுக ஆட்சியில் யாரெல்லாம் சரியில்லையோ, துரோகம் இழைக்கிறார்களோ,
அவர்களை எல்லாம் நாம் நீக்கினோம். அவர் சேர்த்துக்கொண்டிருக்கிறார்…’’ என்று பேசியிருக்கிறார்.
அதோடு இதுவரை அதிமுகவுக்கு 49 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று
ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 1. பாரதிய ஜனதா கட்சி 2. பாட்டாளி மக்கள் கட்சி 3. அம்மா
மக்கள் முன்னேற்ற கழகம் 4. தமிழ் மாநில காங்கிரஸ் 5. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
(ஜான்பாண்டியன்) 6. இந்திய ஜனநாயக கட்சி (பாரிவேந்தர்) 7.புதிய நீதி கட்சி (ஏசி சண்முகம்)
8. அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் 9.புரட்சி பாரதம் (பூவை ஜெகன் மூர்த்தி) 10. தமிழ்
மாநில முஸ்லிம் லீக் (சேக் தாவூத்)
11. பெருந்தலைவர் மக்கள் கட்சி (என். ஆர் தனபாலன்) 12. தென்னிந்திய
ஃபார்வர்டு பிளாக் (திருமாறன் ஜி) 13. பாரதிய ஃபார்வர்டு பிளாக் (முருகன் ஜி) 14. தமிழ்
தேசிய ஃபார்வர்ட் பிளாக் (உசிலை சங்கிலி) 15. தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பு
(சந்தன பிரியா பசுபதி பாண்டியன்) 16. கள்ளர் முன்னேற்ற சங்கம் 17. மருது சேனை (ஆதிநாராயணன்
தேவர்) 18. புரட்சித் தமிழகம் (ஏர்போர்ட் மூர்த்தி) 19. தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற
சங்கம் 20. தமிழக நீதி கட்சி (வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம்)
21. தமிழ்நாடு பிராமணர் சங்கம் 22. கொங்கு மக்கள் முன்னணி 23.
தமிழ் தேசிய கட்சி 24. அகில இந்திய நாடார் மகாஜன சபை 25. கொங்குநாடு முன்னேற்ற கழகம்
(பெஸ்ட் ராமசாமி) 26. நமது கொங்கு முன்னேற்ற கழகம் 27. கொங்கு தமிழர் எழுச்சி பேரவை
28. கொங்கு நாடு விவசாயிகள் கட்சி 29. உழவர் உழைப்பாளர் கட்சி 30. தமிழ்நாடு ஊராளி
கவுண்டர் கூட்டமைப்பு
31. தமிழ்நாடு தேவர் பேரவை 32. தென்னாட்டு மக்கள் கட்சி 33. நேதாஜி
சுபாஷ் சேனை 34. மருது தேசிய கழகம் 35. தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்கம் 36. ஒருங்கிணைந்த
இந்திய ஐக்கிய குடியரசு கட்சி 37. ஆதி தமிழர் முன்னேற்ற கழகம் 38. அகில இந்திய முக்குலத்தோர்
பாசறை 39. தமிழ்நாடு நாடார் சங்கம் 40. அனைத்து மக்கள் அரசியல் கட்சி (ராஜேஸ்வரி பிரியா)
41. தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு 42. அனைத்து
மருத்துவர் மக்கள் முன்னேற்ற சங்கம் 43. அகில இந்திய குயவர் உரிமை கட்சி 44. இந்திய
உழவர் உழைப்பாளர் கட்சி 45. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் 46. அகில
இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் (டாக்டர் சேதுராமன்) 47. நாடார் பாதுகாப்பு பேரவை
48. வளரும் தமிழகம் கட்சி 49. தமிழ்நாடு முன்னேற்ற காங்கிரஸ்.
அடேங்கப்பா, பட்டியல் பெருசா இருக்கே.
