News

விஜய்க்கும் சீமானுக்கும் டஃப் போட்டி.? உறுதியாகும் நான்குமுனைப் போட்டி

Follow Us

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 8 மணி நேரத்தில் 3 கார்களை மாற்றி மாற்றி பயணித்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதோடு, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வி நிலவுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் டெல்லி சென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு வாகனம் வழங்கப்படும். அதன்படி டெல்லி விமான நிலையத்திலிருந்து அதிமுக அலுவலகத்திற்கு வர எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்தியது அரசு வழங்கிய இன்னோவா கார். அதன் பிறகு அமித்ஷாவை சந்திக்க ஆடி காரை பயன்படுத்தினார். இரண்டு மணி நேரம் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு வெளியே வரும்போது பென்ட்லி காரை பயன்படுத்தி எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடந்துள்ளது. 20 நிமிடங்களுக்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியே பேசியுள்ளார்.

தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்துப் பேசப்படும் என்று கூறிய மீண்டும் அமித்ஷாவை கூட்டணி நிமித்தம் சந்தித்துப் பேசி இருக்கிறார். அதிமுகவும் பாஜகவும் 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தன. 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கவில்லை., இரு அணிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

இதையடுத்து தி.மு.க.வை ஜெயிப்பதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்வோம் என்று சொன்னதன் அடிப்படையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி அமைக்கப்படும், தி.மு.க. துடைத்து வீசப்படும் என்று பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. இப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒப்புகொள்ள பா.ஜ.க. தயாராக இருந்தாலும், துணை முதல்வர் பதவி கேட்கும் என்று தெரிகிறது.

இன்று சென்னை வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். வழக்கம்போல் இருமொழிக் கொள்கை, கல்விக்கு நிதி என்றெல்லாம் பேசி திசை திருப்புவாரா… தைரியமாக ஒப்புகொள்வாரா என்று ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் மக்கள். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்றால் அண்ணாமலை பதவிக்கு சிக்கல் வந்துவிடும், அதனால் இப்போதே அவரை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link