Share via:
“அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு
ஒரு காலக்கெடு வைத்துள்ளோம். அதற்குள் அது நடக்காவிட்டால் எங்களது அடுத்த கட்ட முடிவை
எல்லோரும் இணைந்து அறிவிப்போம்” என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று
வெளிப்படையாக அறிவித்திருப்பது அதிமுகவில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.
அதோடு செங்கோட்டையன் பேசுகையில், ‘’நானும், எஸ்பி வேலுமணி, சிவி
சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்பழகன் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒற்றுமையை
வலியுறுத்தியது உண்மை. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்று செய்தியாளர்கள்
முன் பச்சை பொய் கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஒரு தலைவரா?
2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில்
அதிமுக வென்றிருக்கும். அதே தான் எஸ்.பி. வேலுமணியின் கருத்து. ஆனால் எடப்பாடி கேட்காமல்
அடம்பிடித்தார்
யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச்செயலாளரே முடிவெடுத்துக் கொள்ளலாம்.
10 நாட்களில் இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும். தென் மாவட்டங்களில் உள்ள நிலை
எல்லோருக்கும் தெரியும். 6 பேர் சந்தித்த பிறகு, கட்சி முடிவுகள் குறித்து என்னிடம்
பேசுவது இல்லை..’’ என்று கலகக்குரல் எழுப்பியிருக்கிறார்.
இந்த விவகாரத்தை பலரும் தூண்டி விடுகிறார்கள். ‘’தலைமை யாராக இருந்தாலும்
ஆள்வது அதிமுகவாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.,,ஜெயலலிதாவை போல் எடப்பாடியாருக்கு
தனியாக வாக்கு வங்கி இல்லை. அதிமுகவின் வாக்கு வங்கி இபிஎஸ் தலைமைக்கு பிறகு பாதியாக
குறைந்துள்ளது. ஒன்றுபட்ட அதிமுக இருந்தால் தான் அதிமுக ஆட்சிக்கு வரமுடியும். என்கிறார்கள்.
அதோடு எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்
என்ற செய்தி பரவலாக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இபிஎஸ் என்ன பதில் சொல்லப்போகிறார்?