News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ரூ.100 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஜூக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்றி நடித்து வரும் பிரகாஷ் ராஜூக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

 

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரணவ் ஜூவல்லர்ஸ், தங்கநகை முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ.23.70 லட்சம் மற்றும் தங்கநகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அதன்படி இந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link