Share via:
இந்த வாரம் செந்தில்பாலாஜி மீது ஜாமீன் மீது நடைபெறும் நேரத்தில்
அவருக்கு எதிராக சரியான வாதங்கள் வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அவரை ஜாமீனில்
விடுவிக்க வாய்ப்பு அதிகம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி
வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த முறை தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு இல்லை.. சி.ஆர்.பி.எஃப்.
படை வீரர்கள் இல்லை. தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் இல்லை. இதற்குப் பதிலாக
அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் மட்டும் கேரளா மாநில பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்துள்ளனர்.
அவர்கள் நேராக செந்தில் பாலாஜியின் தாய் தந்தையர் வசிக்கும்
கரூர் ராமேஷ்வைரைபட்டி வீட்டுக்கே நேராக சென்றுள்ளனர். இதே கரூர் ராமேஷ்வரப்பட்டி இல்லத்தில்தான்
அவர்கள் நீண்ட காலமாக வசிக்கிறார்கள். இந்த இல்லத்தில் ஏற்கெனவே பல முறை சோதனை நடத்தப்பட்டு
விட்டது.
இத்தனை நாட்கள் சோதனை செய்த பிறகும் மீண்டும் மீண்டும் சோதனை
நடத்தப்படுகிறது. இந்த வாரம் ஜாமீன் மனு மீதான விசாரணை இந்த வாரம் வருகிறது, அதனை நிராகரிப்பதற்காகவே
மட்டுமே இந்த சோதனை என்று தி.மு.க. புள்ளிகள் கொந்தளிக்கிறார்கள்.
எப்படியோ செந்தில்பாலாஜிக்கு மீண்டும் ஜாமீன் இல்லை என்பது இப்போதே
உறுதியாகிவிட்டது.