News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலீஸார் என்கவுன்டர் செய்திருப்பது மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், தந்தை மூர்த்தி, தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது, தந்தை மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, மூர்த்தி காவல் உதவி எண்ணான 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார்.

ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு இந்த புகாரை விசாரிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிக்கனூத்து கிராமத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன்  ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த தங்கபாண்டி, அவரது சகோதரர் மணிகண்டன் எங்கள் பிரச்னையை விசாரிக்க நீ யார் என்று கேட்டு தோட்டத்தில் இருந்த அரிவாளைக் கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொன்றனர்.

இந்நிலையில் சண்முகவேல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான மணிகண்டனை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.  விசாரணைக்காக மணிகண்டனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போது, அவர் சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதாகவும் அப்போது தாங்கள் சுட்டதில், அந்த  இடத்திலேயே மணிகண்டன் இறந்த்தாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கப்பாண்டி மணிகண்டன் ஆகியோர் மீது வழிப்பறி கொலை முயற்சி வெளியிட்ட பல்வேறு வழக்குகள் திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸார் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் எப்படி மீண்டும் தப்புவதற்கு முயற்சி செய்வார், அவருக்கு ஆயுதம் கிடைத்தது எப்படி என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், போலீஸார் எத்தனையோ பேரை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். அவர்கள் மீதும் இப்படி என்கவுன்டர் பாயுமா என்பதே கேள்வி. இல்லாதவர்கள், ஏழைகள் மீது மட்டுமே நடக்கும் இந்த என்கவுன்டர் ஊழல்வாதிகள் மீது பாயாதா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link