Share via:

இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அதானி எப்படி நெருக்கமான நட்போ,
அப்படித்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பும் எலான் மஸ்க்கும் பிரிக்க
முடியாத கூட்டாளிகள். தமிழக மக்களுக்குப் புரியும் வகையில் சொல்வது என்றால் ஜெயலலிதா
சசிகலா கூட்டணி போன்றது.
அமெரிக்காவுக்குப் போயிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை
அமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்ட
மிகப்பெரும் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பில் எல்லான் மஸ்க் அவரது குழந்தைகளை கூட்டிட்டு
வந்து மீட்டிங்கை நடத்தி இருப்பது பெரும் வைரலாகிவருகிறது.
’எப்புடினாலும் பாட்டி வடை சுட்டா கதைதான் சொல்ல போறார், அதான்
சின்ன பிள்ளைகளை உக்காரா வச்சு கலாய்கிறான் எலான் மஸ்க்’ என்று எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் பா.ஜ.க.வினர், ’நம்ம மோடிஜிக்கு மதிப்பைப் பார்த்தீங்களா, எலான் மஸ்க் பிள்ளைகளைக் கூட்டிவந்து ஆசிர்வாதம் வாங்க வைக்கிறான்’
என்று கெத்து காட்டுகிறார்கள்.
ஆளை விடுங்கப்பா சாமி.