News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இன்று முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


அடுக்குமாடி குடியிருப்புகளில் வகிப்பவர்களின் மோட்டார், மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு இதற்கு முன்னர் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் 15 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைந்து கடந்த மாதம் (அக்டோபர்) 18ம் தேதி புதிய உத்தரவை பிறப்பித்தார்.


முதலவரின் அறிவிப்பைத் தொடர்ந்து மின்சாரத்துறை அதற்கான அறிவிப்பாணையை நேற்று (அக்.31) வெளியிட்டது. அதில், 10 வீடுகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாக உள்ள மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி இன்று முதல் (நவ.1) பொது பயன்பாட்டு மின் கட்டணமாக ஒரு யூனிட் ரூ.5.50 வசூலிக்கப்படும் என்று அந்த அறிவிப்பாணையல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது விநியோகம் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link