News

பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

Follow Us

இன்று மாலை தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை வெளியிடப்படுகிறது.  இதையடுத்து திங்கள் முதல் தேர்தல் வரைமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு விஜய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது.

விஜய் இன்றும் நாளையும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசி அதிமுக கூட்டணியில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்றைய தினம் சாணக்கியா விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமியிடம் விஜய் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு இபிஎஸ், ‘நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். இதுவரை விஜய்யுடன் பேசவில்லை, பிறகு எப்படி கூட்டணி வரும்? ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்துகிறார்கள். அதிமுக எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை, பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை…’’ என்று நெத்தியடியாக அடித்துவிட்டார்.

அப்படியென்றால் வரும் தேர்தலில் தனித்து நிற்பது தவிர வேறு வழியே இல்லை. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு செய்து, அறிவித்து, அவர்களுக்கு பிரசாரம் செய்வது என்பது சாதாரண வேலை இல்லை.

எனவே, விஜய் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா என்பதே கேள்வியாக மாறி நிற்கிறது. சிங்கத்தை சிதைச்சுட்டாங்களே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link